திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 25 ஜூன் 2016 (23:19 IST)

சுவாதியை கொலை செய்த கொலையாளியின் புகைப்படம் வெளியீடு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சமீபத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த நபர் ரயில் நிலையத்தில் அருகில் உள்ள சிசிடிவி கேமிராவில் சிக்கியுள்ளார்.


 

 
படுகொலை நடைபெற்ற நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால், குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
இதனால், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றவாளியைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர புலன் விசாரணையில் உள்ளனர். 
 
இந்நிலையில் இரயில் நிலையம் அருகில் இருந்த கடை ஒன்றில்  கொலை நடந்த சிறுது நேரத்தில் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சியில் கொலையாளி நடந்து செல்வது தெரிகிறது.
 

நன்றி : NDTV
காவல் துறையினர் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டு அவனை பற்றி தகவல் கொடுக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ அனைத்து தொலைகாட்சியிலும் வெளியாகி வருகிறது.