வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (14:30 IST)

சுவாதி கொலை வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது : கமிஷனர் தகவல்

நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கு விசாரணை பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சுவாதியை கொலை செய்த கொலையாளி பற்றிய வீடியோ மூலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், அதில் கொலையாளியின் முகம் தெளிவாக தெரியவில்லை. எனவே, அவனை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சுவாதி கொலை பற்றி பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. இதுபற்றி செய்தியாளர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் கருத்து கேட்டனர். 
 
அதற்கு பதிலளித்த அவர் “சுவாதி கொலை வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பொதுமக்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்” என்று அவர் கூறினார்.