1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2016 (15:34 IST)

ரூபாய் தட்டுப்பாடு ; மொய் வைக்க பணம் செலுத்தும் கருவி : களை கட்டும் கல்யாணங்கள்

ரூபாய் தட்டுப்பாடு ; மொய் வைக்க பணம் செலுத்தும் கருவி : களை கட்டும் கல்யாணங்கள்

ரூபாய் நோட்டு பிரச்சனை திருமண சடங்குகளில் மொய் வைக்கும் விவகாரத்திலும் எதிரொலித்துள்ளது.


 

 
தற்போது மக்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் கடுமையான அளவுக்கு பணத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். 
 
வங்கி மற்றும் ஏ.டி.எம்-களின் முன் நிற்கும் நீண்ட வரிசை எளிய மனிதர்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க மக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படியே பணம் எடுத்தாலும், புதிய 2000 ரூபாய் நோட்டுகள்தான் பெரும்பாலும் கிடைக்கிறது. 
 
ஆனால், அதற்கும் சில்லரை கொடுக்க யாரிடம் 100 ரூபாய் நோட்டுகள் இல்லை. எனவே மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில், இந்த பணத்தட்டுபாட்டால், சமீபத்தில் நடத்த முடிந்த திருமண விழாக்களில் எல்லாம் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
 
காரணம், திருமணத்திற்கு சென்றால் மொய் வைக்க வேண்டும். அங்கும் 500 மற்றும் 1000 நோட்டுகள் வாங்க மாட்டார்கள். எனவே திருமணத்திற்கு செல்லாமல் பலர் தவிர்க்கின்றனர். 
 
எனவே திருமண மண்டபங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால், இந்த பிரச்சனையை சிலர் புத்திசாலித்தனமாக சமாளித்துள்ளனர். அதாவது, மொய் பணம் வைக்க, ரூபாய் நோட்டுகளுக்கு பதில் பணம் செலுத்தும் கருவி( ஸ்வைப்பின் மிஷின்) வைத்தனர். அதாவது, மொய் வைக்க விரும்புவர்கள், தங்கள் டெபிட் கார்டை அதில் தேய்த்து செல்கின்றனர். 
 
கோவில்பட்டியில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளது. இதனால், திருமணத்திற்கு வந்தவர்கள், தாங்கள் விரும்பிய பணத்தை மகிழ்ச்சியோடு செலுத்தி சென்றனர்.
 
அதன்பின் தமிழகத்தின் நடந்த பல திருமணங்களில் இந்த முறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.