1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (13:02 IST)

படத்துல ஹீரோ, அரசியல்ல ஜீரோ: ரஜினி அரசியல் ஆசையில் மண்ணை வாரிப்போட்ட சர்வே முடிவுகள்

பிரபல செய்தி நிறுவனம் நடத்திய சர்வேயில் தமிழக அரசியலில் ரஜினியின் மவுசு குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா டுடே தொலைக்காட்சியின், ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பும் மற்றும் பிரபல கருத்து கணிப்பு அமைப்பும் சேர்ந்து தமிழகத்தில் அடுத்து முதலமைச்சராக ஆக யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. கருத்துக்கணிப்பின் இந்த முடிவு பல அரசியல் கட்சிகளை அதிர வைத்துள்ளது.
 
கருத்துக்கணிப்பின் முடிவுகளில் அடுத்ததாக தமிழகத்தில் முதல்வராகும் தகுதி ஸ்டாலினுக்கே உள்ளது என 43 சதவீதம் பேர் சொல்லியிருக்கின்றனர். அடுத்தடுத்த இடங்களில் கமல் 10 சதவீதமும், எடப்பாடியார் 8 சதவீதமும், ராமதாஸ் 9 சதவீதமும் ஆதரவு பெற்றுள்ளனர். 
 
இந்லையில் பல ஆண்டுகளாக அரசியலில் நுழைய சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டும் ரஜினியின் அரசியல் மவுசு வெறும் 5 சதவீதமே பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த சர்வேயில் 6 சதவீத ஆதரவுகளை பெற்றிருந்த ரஜினியின் மவுசு தற்பொழுது ஒரு சதவீதம் குறைந்துவிட்டது. ஆகவே ரஜினி அரசியலுக்கு வராமல் தொடர்ந்து படத்தில் மட்டுமே நடித்தால் நல்லது, வந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என பலர் கூறி வருகின்றனர்.