1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2016 (12:23 IST)

இன்று விசாரணைக்கு வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு?

இன்று விசாரணைக்கு வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர் மருத்துவமனையில் இருக்கும் போது இந்த வழக்கு இப்போது விசாரணைக்கு வர உள்ளதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.


 
 
கர்நாடக கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்து மேல்முறையீட்டில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நான்கு வாரத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியானது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இதனால் இந்த வழக்கின் தீர்ப்பும் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.