1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (06:32 IST)

ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தெலுங்கானா சொத்துக்களை தெலுங்கானா அரசே கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவிடக்கோரி ஐதராபாத்தைச் சேர்ந்த ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்கு விளம்பரத்திற்காக போடப்பட்டது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்ததோடு வழக்கை தொடர்ந்த கரீப் கைடு’ தன்னார்வ நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் ஜி.பார்கவி என்பவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.




இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தா. இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சஞ்ஜய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் மனுவை தள்ளுபடி செய்தனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள், மகன் இருக்கும்போது வாரிசு இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்ததாக வழக்கறிஞர்கள் கூறினர்.