செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (13:35 IST)

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சவுக்கு சங்கர் தாயார் கமலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு  மனு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. இன்றைய விசாரணையின் போது சவுக்கு சங்கரை ஏன் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கரை விடுவித்தால்  பொது ஒழுங்கு கெடும் என தமிழ்நாடு அரசு தரப்பு பதில் அளித்தது. மேலும் சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், குண்டர் சட்டத்தின் கீழான கைதுக்கு எதிரான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம்,சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?  என கேள்வி எழுப்பி இதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Edited by Mahendran