வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (15:40 IST)

பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்! 23 பேர் பலி

pakistan
பாகிஸ்தானின் கைபர் பக்துலா  மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள  ராணுவத் தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
 

பாகிஸ்தானின் கைபர் பக்துலா  மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில்  ராணுவத் தளம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையில்,  இந்த ராணுவ தளத்தின் மீது அதிகாலை தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், 23 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.  இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.