1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (12:57 IST)

ரஜினி ஒரு 420; அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்: மட்டமாக விமர்சிக்கும் சு.சாமி!

ரஜினி ஒரு 420; அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்: மட்டமாக விமர்சிக்கும் சு.சாமி!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்.


 
 
நடிகர் ரஜினிகாந்த் உடல் பரிசோதனை செய்ய கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். உடல் பரிசோதனை நேரம் போக மீதி நேரம் அவர் நண்பர்களுடன் உரையாடுதல், அரசியல் ஆலோசனை செய்தல் உள்ளிட்ட பல விஷயங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்.
 
தற்போது ரஜினிகாந்த் ஒரு கிளப்பில் கேசினோ விளையாடி கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
 
இந்நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வாவ் ரஜினிகாந்த் 420 அமெரிக்கா சூதாட்ட விடுதியில் தனது உடல்நலனை முன்னேற்றுகிறார். அவரிடம் பணம் எப்படி வந்தது என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 
ரஜினி அரசியலுக்கு வர இருக்கிறார் என்ற செய்திகள் வர ஆரம்பித்ததில் இருந்தே பாஜக அவரை வரவேற்றாலும், சுப்பிரமணியன் சுவாமி அவரை கடுமையாக எதிர்த்து வருகிறார். தொடர்ந்து ரஜினியை மட்டமாக விமர்சித்து வருகிறார்.