1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (13:56 IST)

சுப்பிரமணியன் சாமி மீது மேலும் இரண்டு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தார் ஜெயலலிதா

சுப்பிரமணியன் சாமி மீது ஜெயலலிதா தரப்பில் மேலும் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
 
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக டுவிட்டரில் அவதூறு செய்தி வெளியிட்டதாக அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்டன.
 
இந்த மூன்று வழக்குகளிலும் அவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
 
இந்நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேலும் இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து இதுவரை சுப்பிரமணியன் சாமிக்கு எதிராக 5 அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.