மதுரையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராடிய மாணவர்கள் கைது
மதுரையில் நீட் தேர்வில் மாணவர்களுக்கு தமிழுக்கு பதிலாக இந்தியில் வினாத்தாள் வழங்கியதால் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நரிமேட்டில் மாணவர்கள் நீட் தேர்வு எழுத சென்றனர். அங்கு அவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. சிலருக்கு மட்டும் தமிழில் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு மதிய உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த குளறுபடி காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.