1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (12:28 IST)

சித்தியை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்ற மாணவன் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தி முறை பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.


 

பெரம்பலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவரை அவரது மகன் முறைகொண்ட விக்னேஸ்வரன் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தனது காதலை அந்த மாணவியிடமும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவனை கண்டிதத்து மட்டுமின்றி பெற்றோர்களிடமும் புகார் தெரிவித்தார். ஆனாலும் தனது காதலை விட மறுத்துள்ளார் விக்னேஷ். எப்படியாவது அந்த பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்று தனது நண்பர்களுடன் திட்டம் தீட்டினார். அதன்படி சித்தி முறை கொண்ட அந்த மாணவியை விக்னேஷ்வரன் தனது நண்பர்கள் உதவியுடன் காரில் கடத்தினார். அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஊர் மக்கள் இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே காரை மடக்கி பிடித்த போலீஸார் அந்த பெண்ணையும் மீட்டுள்ளனர். மேலும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர்.