ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (09:20 IST)

சென்னையில் 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்கள் ரத்து..!

wine
சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து உடனடியாக மூட மதுவிலக்கு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், ஹவுஸ், தாஜ் கிளப், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஹையத் ரீஜன்சி, தி பார்க்  ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன.

அவற்றுள் சட்ட விதிகளுக்கு மாறாக வெளி நபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்தன.

ஆதலால், சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த F.L.3 உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்தும் அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


Edited by Siva