1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (18:44 IST)

வருகைப்பதிவேட்டில் முறைகேடா? மருத்துவக் கல்லூரி விளக்கம்

signature2
வருகைப்பதிவேட்டில் முறைகேடா? மருத்துவக் கல்லூரி விளக்கம்
வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் இல்லை என ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விளக்கம் அளித்துள்ளது.
 
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மாணவி வருகைப் பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ வெளியான சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டதாகவும், இதில் வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என மருத்துவக் கல்லூரி விளக்கம் அளித்துள்ளது.
 
மேலும் முதுநிலை கலந்தாய்வின் இறுதிச்சுற்று நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் வருகைப்பதிவுக்காக வருகைப்பதிவேடு திறக்கப்பட்டது எனவும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது.
 
மாணவி மற்ற மருத்துவர்களுக்கோ அல்லது தான் வராத நாட்களுக்கோ கையொப்பம் இடவில்லை என்றும், கையொப்பமிட்ட சம்பவம் குறித்து பயமாக இருப்பதாகவும், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவி புகார் அளித்துள்ளார்  என ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஸ்டான்லி