செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (18:11 IST)

கமல்ஹாசனின் பேரன்பு என்னை நெகிழ வைத்தது: முதல்வர் ஸ்டாலின் டுவிட்

கமல்ஹாசனின் பேரன்பு என்னை நெகிழ வைக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து கமல் ரஜினி உள்பட பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் முதல்வரின் சாதனைகள் பெருமைகளை கூறி உள்ளார். 
 
கமல்ஹாசனின் இந்த வீடியோ குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
 
கலையுலகிலும் அரசியலிலும் இணைந்து பயணிக்கும் நெஞ்சுக்கினிய நண்பர் 'கலைஞானி' திரு. கமல்ஹாசன் அவர்களது பேரன்பு நெகிழ வைக்கிறது! தொலைபேசி வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நெஞ்சார வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு  நன்றி!