1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 ஜூன் 2018 (14:57 IST)

ஒருமுறை ஸ்டாலினையும் இப்படி செய்தால் சரியாகிவிடும் - எச்.ராஜா டுவிட்

ஆளுநருக்கு எதிராக போராட்டம் செய்த ஸ்டாலினை கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுகவினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
 
நேற்று நாமக்கல் மாவட்டத்துக்கு தமிழக அளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கு சென்றிருந்தார். அப்போது திமுகவினர் ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடி வீசினர். இதனால் திமுகவினரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகை நோக்கி தனது கட்சியனருடன் பேரணி சென்றார். இதனால் போலீசார் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சி தொண்டர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

 
 
இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124 தெளிவாக கூறுகிறது ஜனாதிபதி/ஆளுனரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு. நாமக்கல் காவல்துறை செயல் சட்டப்படி சரி என்று தெரிவித்தார். மேலும், காலையில் கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுக வினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.