1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (19:07 IST)

ஏழுபேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மரணம் தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர் உள்ளிட்ட 7 பே விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட  7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஏழுபேரில் விடுதலை தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் உச நீதிமன்றத்திலும் தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இதுகுறித்து முடிவெடுக்கலாம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில்,  தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிடோர்ர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.