திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (20:28 IST)

இறுதிச்சடங்கில் கூட்ட நெரிசல்; காயமானோரை நேரில் சந்தித்த ஸ்டாலின்!

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் இறுதி அஞ்சலியின் போது ஏராளமான பலர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். பொதுமக்கள் விஐபி வரிசையில் அத்துமீறி நுழைந்ததால், போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்து பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். கூட்ட நெரிசலில் சிக்கி 26 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.