Daily Horoscope
✕

நரேந்திர மோடி எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை: மு.க.ஸ்டாலின்

Updated: திங்கள், 26 நவம்பர் 2018 (08:55 IST)
தமிழகத்தில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை பாரத பிரதமர் நரேந்திரமோடி சேதப்பகுதியை வந்து பார்வையிடவில்லை என்றும், இடைக்கால நிவாரண நிதி கூட ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறைந்தபட்சம் மத்திய அமைச்சர்கள் கூட யாரும் கஜா புயல் பகுதிக்கு செல்லவில்லை என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது

இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பை பிரதமர் இன்னும் பார்வையிடாதது குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'பிரதமர் நரேந்திர மோடி தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்தியாவில் இருக்கிறாரா? அல்லது வெளி நாட்டில் இருக்கிறாரா? என்றும் தெரியவில்லை. ஒருவேளை, வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு கிடைக்கிற போது வந்தாலும் வரலாம்' என்று கூறியுள்ளார்.

மத்திய அரசிடம் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசூ 15 ஆயிரம் கோடி ரூபாயை கேட்டுள்ளதாகவும், அந்த பணம் நிவாரண பணிக்கு போதாது என்பதால் மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எல்லாம் காட்டு

ரூ. 1 கோடி சம்பாதித்தாலும் ரூ.1 லட்சம் கூட சேமிக்க முடியவில்லை.. அமெரிக்காவில் உள்ள இந்திய பெண் ஆதங்கம்...

தனி ஆளாக ரூ.50 கோடி நகையை தூக்கிய நபர்!.. தனிஷ்க் ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது எப்படி?...

ஈரான் மீது போர்.. வேணும்.. வேணாம்!.. இஸ்ரேல் பிரதமருக்கும் டிரம்புக்கும் இடையே மோதல்...

மதுரை தனிஷ்க் ஜூவல்லரியில் 35 கிலோ நகை கொள்ளை!.. கடை திறந்து 15 நாட்களில் அதிர்ச்சி...

ரூ. 20 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம்.. இன்று ரூ.2.5 கோடி வருமானம்.. 3 இந்தியர்கள் சாதனை...

அடுத்த கட்டுரையில்
Show comments