நடைபயணத்தை முடித்த கையோடு கார் பயணம்: ஸ்டாலினின் காவிரிக்கான அடுத்த ப்ளான்!

Last Modified செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (18:21 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம் கடலூரில் 12 ஆம் தேதி நிறைவடைகிறது. 
 
இதன் பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வரும் 13 ஆம் தேதி சந்தித்து பேசவுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இந்த சந்திப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத்தர ஆளுநர் மூலம் மத்திய அரசிற்கு அழுத்தம் தரும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார். 
 
இந்நிலையில், தனது அடுத்த போராட்ட திட்டத்தை பற்றியும் தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது, கடலூரில் 12 ஆம் தேதி நடைபயணம் முடிந்தவுடன் கடலூரிலிருந்து ராஜ்பவனை நோக்கி கார் பேரணி மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :