திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:15 IST)

கச்சத்தீவு எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்: இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்

கச்சத்தீவு விவகாரம் தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில் இது குறித்து இலங்கை அமைச்சர் தொண்டைமான் கருத்து தெரிவித்த போது இலங்கையை பொருத்தவரை கச்சத்தீவு எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக திடீரென கச்சத்தீவை மீட்போம் என்று மத்திய அரசு கூறி இருப்பதும் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் தான் காரணம் என்றும் பாஜக குற்றம் சாட்சி வருகிறது.

இந்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பும் கச்சத்தீவு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் இது குறித்து மிகப் பெரிய வாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அமைச்சர் தொண்டைமான் இது குறித்து விளக்கம் அளித்த போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றும் கச்சத்தீவை  திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிடம் இருந்து இதுவரை எழவில்லை என்றும் தெரிவித்தார்
 
ஒருவேளை கச்சத்தீவு தொடர்பாக இந்தியா கோரிக்கை விடுத்தால் இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அளிக்கும் என்றும் இலங்கையை பொருத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, இனிமேலும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Edited by Siva