பொருளாதார நெருக்கடி: இலங்கையில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில் அந்நாட்டில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே 3 குழந்தைகள் உள்பட 6 பேர் ரோந்து படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் இன்னும் ஏராளமான இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வர வாய்ப்பிருப்பதாகவும் இதனையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சிக்கல் காரணமாக அந்நாட்டில் அடிப்படை அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத பொதுமக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.