காரைக்கால் மீனவர்கள் கைது


Ashok| Last Updated: வியாழன், 10 டிசம்பர் 2015 (14:44 IST)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கோரி காரைக்காலைச் சேர்ந்த 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மீனவர்களுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
தமிழகத்தின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் சில நாட்களுக்கு முன்பு படகு மூலமாக மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும்போது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும், படகை பிடித்து சென்றனர்.
 
இலங்கை சிறையில் ஏற்கனவே 51 மீனவர்கள் உள்ள நிலையில் தற்போது 10 மீனவர்கள் 10 பேரை மீனவர்களை இலங்கை படையினர் பிடித்து சென்றுள்ளனர். இந்நிலையில், மீனவர்களை விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :