திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (18:39 IST)

உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு.. அதுதான் ஸ்டாலின்!

இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக ஸ்டாலினும், பொருளாலராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 
இதையடுத்து, அறிவாலயத்தில் கூடியுள்ள திமுக நிர்வாகிகளும், வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்களும் ஆர்ப்பரித்து தங்கள் உற்சாகத்தை தெரிவித்தனர். அதன்பின் அவர் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு கோபாலபுரம் சென்றார். 
 
இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சமாதி, எப்போதும் இல்லாத வகையில் மூக்கு கண்ணாடி மற்றும் பேனாவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
 
அதில் உழைப்பு உழைப்பு உழைப்பு அதுதான் ஸ்டாலின் என்று எழுதப்பட்டு கலைஞரின் கையொப்பம் இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனை பலரும் காண்பதற்காகவே அங்கு வந்து செல்கின்றனர்.