1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 2 ஜூன் 2016 (16:47 IST)

அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் கத்திரி வெயிலின் காலம் மே 28-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றாலும், தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை நீடித்து வந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


 
 
கேரள மாநிலத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் தென்மேற்கு பருவமழை வரும் ஜுன் 4 அல்லது ஜுன் 5-ஆம் தேதிகளில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து செய்தி வெளியிட்ட வானிலை மையம், தமிழகத்தில் வெயில் படிப்படியாக குறையும் என்றும், அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம், மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
 
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 6-ஆம்தேதி தொடங்கும் என கொச்சியில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.