1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (17:10 IST)

ரயில்களில் இனி பயணிகள் சார்ட் ஒட்டப்படாது; ரயில்வே துறை அதிரடி

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி விரைவு ரயில்களில் பயணிகளின் பட்டியல் ஒட்டும் பணி விரைவில் நிறுத்தப்பட உள்ளது என ரயில்வே வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
புது டெல்லி, மும்பை செண்ட்ரல் உட்பட 6 முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் பயணிகளின் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட உள்ளது.
 
முதலில் இதை சோதனை ஓட்டமாக 3 மாதங்களுக்கு பரிசோதனை முறையில் செய்ய உள்ளனர். பின் அதில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதனை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சார்ட் ஒட்டும் பணியால் ரயில்வே துறைக்கு ஆண்டு தோறும் ரூ.30 லட்சம் செலவிடுகிறது. 
 
ஏற்கனவே பெங்களூர் மற்றும் யஷ்வந்த்புர் ரயில் நிலையங்களில் பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இதன்பிறகே தெற்கு ரயில்வே துறை பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்த முடிவு செய்தது.
 
மேலும், ரயில்களில் ஒவ்வொரு பெட்டிகளிலும் பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்படுவதற்கு மாறாக ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஒட்டுமொத்த பயணிகளும் சார்ட் ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.