வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்த குமார்
Last Updated : வியாழன், 10 மார்ச் 2016 (11:09 IST)

தந்தைக்கு பதவி இல்லை:மக்களை பழி வாங்கும் ஊராட்சி செயலாளர்

தன்னுடைய தந்தைக்கு ஒன்றியக்குழுத் தலைவர் பதவி கிடைக்க வில்லை என்ற காரணத்தினால், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் பழி வாங்கும் கரூர் ஊராட்சி செயலாளர் பற்றி செய்தி வெளியாகியிருக்கிறது. 


 

 
கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதிக்குட்பட்ட இலாலாபேட்டை பகுதியை சார்ந்த சிந்தலவாடி கிராமம் பகுதியை சார்ந்தவர் என்.பி.ஏ.கணேசன். இவரது தம்பி என்.பி.ஏ.யோகபால், யோகபால் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வந்த அவர் மாரடைப்பு காரணமாக சென்ற வருடம் மரணமடைந்தார். 
 
இவரது அண்ணன் என்.பி.ஏ.கணேசன் ஒன்றியக்குழு தலைவராக 10 வருடங்களாக பணியாற்றியவர் கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக பதவியேற்றதுடன், அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின், உறவு முறையான மாமாவான பி.கே.முத்துச்சாமிக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் அவ்வப்போது அ.தி.மு.க கட்சியை வெறுத்த என்.பி.ஏ.கணேசன் அவ்வப்போது சம்பரதாயத்திற்கு அ.தி.மு.க நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். 
 
இந்நிலையில் என்.பி.ஏ.கணேசன் மகன் ராஜரத்தினம் சிந்தலவாடி பஞ்சாயத்தில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். தன் தந்தைக்கு பதவி கிடைக்காததையடுத்து அவர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளான மேலவிட்டுக்கட்டி, சிந்தலவாடி, கண்ணதாசன் தெரு, ஆண்டியப்பன் நகர் உள்ளிட்ட சுமார் 40 ற்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு, சாலை வசதி ஆகியவற்றைகளை ஏதும் நிவர்த்தி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார். 


 

 
மேலும் சுமார் 1 கி.மீட்டர் தூரத்திற்குள் ஒடும் காவிரி நதி நீர் கூட இரு நாட்களுக்கு ஒரு முறை வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மோட்டார் புகைந்து விட்டது. குடிநீர் குழாய் உடைந்து விட்டது, மின்சாரம் இல்லை, ஒயர் புகைந்து விட்டது என்று கூறி ஆங்காங்கே 7 முதல் 10 தினங்கள் வரை குடிநீர் விநியோகம் செய்து வருகிறார். 
 
பஞ்சாயத்து தலைவர் இல்லாமல் இவர் நடத்தி வரும் நாடகங்கள் பல இருக்க, இவரது தகப்பனாரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான என்.பி.ஏ.கணேசன், இத்தொகுதியின் அ.தி.மு.க தொகுதி கழக செயலாளராக இருப்பதும், தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பணம் கட்டி இருப்பது வேடிக்கையான ஒன்றாகும்.
 
மேலும் கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக புதிதாக பொறுபேற்றுள்ள முருகானந்தம் என்பவர் இவரது வீட்டிற்கு அருகே தான் வசிப்பவர் என்பதும், இவரது நண்பரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.