செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:24 IST)

சென்னையின் ஒருசில இடங்களில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர். கோடை வெயில் மிக அதிகமாக இருப்பதை அடுத்து 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை பெரும்பாலான சென்னை மக்கள் தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அம்மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் சென்னையை பொருத்தவரை மழைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டதால் சென்னை மக்கள் தொடர்ந்து அனலில் கஷ்டப்பட்டனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சென்னையில் உள்ள சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடபழனி, கேகே நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதாகவும் இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன