1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (07:55 IST)

முதலமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

முதலமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

புதுச்சேரியில், பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.


 


காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும் அவருடன் வந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தனது செல்போனை எடுத்து முதலமைச்சர் நாராயணசாமியுடன் செல்பி எடுத்தார்.

அந்த காட்சி இணையதளத்தில் வெளியாகி, நாராயணசாமிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.  ”இதுதான் உங்க நாட்டுப்பற்றா?” என பலர் நாராயணசாமியை கலாய்த்து பதிவுகள் செய்து வருகின்றனர்.

”அவர் மீது என்ன தவறு இருக்கு?, கட்சிக்காரர் செல்பி எடுத்தால் அவர் எப்படி பொறுப்பாக முடியும்” என ஒரு சிலர் அவருக்கு ஆதரவகவும் கருத்துக்களை கூறிவருகின்றனர்.