செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 மே 2020 (12:47 IST)

கொரோனாவுக்கு மருந்து என உதார் விட்ட சித்த மருத்துவர் கைது!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறிய திருத்தணிகாசலம் கைது. 
 
சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சென்னையில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது. 
 
இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறிய திருத்தணிகாசலம் மீது அரசு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணை நடவடிக்கை எடுத்தனர். இதன் விளைவாக தற்போது அந்த சித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.