வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated :திருச்சி , சனி, 29 ஜூன் 2024 (15:50 IST)

செல்போன் திருடர்களை பிடிக்கச் சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு!

திருச்சி மாநகரத்தில், இன்று  அதிகாலை 2.20 மணியளவில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட, இளம் ரவுடிகள் சிலரை விரட்டி பிடிக்க முயன்ற கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலர் அப்துல் காதர் (வயது 34) என்பவருக்கு அரிவாளால் வெட்டினர்
 
கழுத்து மற்றும் கை பகுதியில் பலத்த காயம்பட்ட அப்துல் காதர்,சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
போலீசை வெட்டிய அந்த  இளஞ்சிறார்களை பிடித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன