யாரும் இல்லாததால் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டேன்; எப்.ஐ.ஆரில் இன்ஸ்பெக்டர் வாக்குமூலம்
உயர் அதிகாரி யாரும் இல்லாத காரணத்தால் தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக காவல் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.
கடந்த மாதம் 22ஆம் தேது தூத்துக்குடியில் ஸ்டெர்லைக்கு எதிராக நடந்த பேரணியில் கலவரம் வெடித்தது. காவல்துறையினர் கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்று கேள்விக்கு விடை தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டப்பிராம் காவல் ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு துணை வட்டாச்சியர் உத்தரவிட்டதாக கூறப்பட்டது. துணை ஆட்சியர் உத்தரவு இல்லாமல் காவல் ஆய்வாளர் தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்சிஐ கொடவுன் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகவும் அப்போது போராட்டக்காரர்கள் கலவரம் விளைவிக்கும் வகையிலும் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலும் வந்ததாகவும் இதனால் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடும் இல்லாததால் தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக ஒட்டப்பிராம் காவல் ஆய்வாளர் பதிவு செய்துள்ளார்.