செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (16:29 IST)

மாத சம்பளம் ரூ. 9,000 பெறும் பெண் கூலி தொழிலாளிக்கு ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி.. அதிர்ச்சி சம்பவம்..!

மாத சம்பளமாக வெறும் ரூ. 9,000 பெறும் பெண் கூலி தொழிலாளி ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் ராணி பாபு என்ற 58 வயது பெண்மணிக்கு, ஜிஎஸ்டி வரியாக ரூ. 2.39 கோடி செலுத்த வேண்டும் என திருச்சி தலைமை அலுவலகத்திற்கு உட்பட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தன் பேரக் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் ராணி பாபு, வெறும்  ரூ. 9,000   மட்டும் சம்பளம் வாங்கி வரும் நிலையில், ரூ. 2.39 கோடி எப்படி செலுத்த முடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

 இந்நிலையில், தங்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்தது குறித்து, திருப்பத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் ராணி பாபு தனது மகனுடன் சென்று புகார் அளித்துள்ளார் என்றும், தங்களுக்கு ரூ. 2.39  கோடி வருமானம் இல்லை என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால், திருச்சி அருகே உள்ள மாடர்ன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக ராணி பாபுவின் பெயர் குறிப்பிடப்பட்டது என்று வணிக வரித்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


Edited by Mahendran