நடிகர் கமலை பின்பற்றும் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன், சுப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
இவர் நடிப்பிலும், நடன அசைவுகளிலும் கூட ரஜினி சாயல் அதிகமாக இருக்கும். இந்நிலையில், அப்படிப் பட்ட சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் உலக நாயகன் கமலை பின்பற்றுகிறார்.
கமல் எப்போதும் தனது சம்பளத்தை 100 சதவீதம் வெள்ளையில்தான் வாங்கிக் கொள்வார். கமலைப் போலவே சிவகார்த்திகேயனும் தன் சம்பளத்தை வெள்ளையில்தான் பெற்றுக்கொள்கிறார். பெரும்பாலான நடிகர்கள் இதை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.