1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (11:52 IST)

அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த செந்தில் பாலாஜி!

அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த செந்தில் பாலாஜி!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 24 மணி நேரம் கெடு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக மின்சாரத் துறையின் மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை பிஜிஆர் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாகவும் இந்த நிறுவனத்தில் கோபாலபுர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்த நிலையில் பிஜிஆர் நிறுவனத்தில் கோபாலபுரத்து குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது என்பதை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அண்ணாமலை நிரூபிக்காவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்பாலாஜி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது