1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (14:17 IST)

செந்தில் பாலாஜியின் துறைகள் இரு அமைச்சருக்கு மாற்றம்? கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய துறைகள் வேறு இரண்டு அமைச்சருக்கு மாற்றப்பட இருப்பதாகவும் இது குறித்த ஒப்புதலுக்காக கவர்னருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜி மதுவிலக்கு ஆயத்தீர்வு மற்றும் மின்சார துறை ஆகிய துறைகளை கவனித்து வந்த நிலையில் தற்போது தங்கம் தென்னரசுவுக்கு கூடுதல் பொறுப்பாக மின்துறை ஒதுக்கப்படுவதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அரசின் கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran