வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:24 IST)

ஆன்லைனில் மது விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை… அமைச்சர் செந்தில்பாலாஜி!

தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் மிகப்பெரிய வருவாயாக அரசுக்கு இருந்து வருகிறது. ஆனால் தரமான மது இல்லாமல் மோசமான பல மதுவகைகள் விற்கப்படுவதாகவும், பிரபலமான பல மது வகைகள் கடைகளில் எப்போதும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யவேண்டும் எனவும் கணினி ரசிது கொடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபற்றி சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கமணி ஆன்லைனில் மது விற்பது சம்மந்தமாக அரசுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘அப்படியான திட்டம் எதுவும் இல்லை’ எனக் கூறியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.