10 மாதங்களாக தலைமறைவாக இருக்கும் அசோக்குமார்.. செந்தில் பாலாஜி சகோதரர் நிலை என்ன?
ஒரு பக்கம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 10 மாதங்களாக சிறையில் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது சகோதரர் அசோக்குமார் பத்து மாதங்களாக தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது நிலை என்ன என்று தெரியாமல் உள்ளது.
போக்குவரத்து துறையில் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்த நிலையில் இந்த வழக்கில் அவரது சகோதரர் அசோக்குமாரும் இருப்பதால் அமலாக்கத்துறை அவரை தேடி வந்தது
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பியும் அவர் தலைமறைவாக உள்ளார். 10 மாதங்களாக அவர் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் திமுக பிரமுகர்களே அவர் தலைமறைவாக இருக்க உதவி செய்யப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறின.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்த போது கூட அவரது சகோதரர் தலைமறைவாக இருக்கும் நிலையில் ஜாமீன் கொடுக்க முடியாது என்று நீதிபதி ஒரு காரணத்தை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக போலீசார் நினைத்தால் ஒரு சில நாட்களில் அசோக் குமாரை கைது செய்ய முடியும் என்றும் ஆனால் வேண்டுமென்றே இந்த இதில் சுணக்கம் காட்டுகிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அசோக் குமார் எப்போது தான் வெளியே வருவார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலை தான் உள்ளது.
Edited by Mahendran