செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருப்பதை அடுத்து அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த பல மாதங்களாக ஜாமீன் கிடைக்காததால் சிறையில் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்
இதனை அடுத்து அவர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இன்றைய விசாரணைக்கு பின்னர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்தால் திமுகவுக்காக அவர் சூறாவளி பிரச்சாரம் செய்வார் என்று கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக கொங்கு பகுதியில் செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவர் ஜாமீனில் வந்தால் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு ஆதரவாக மாறும் என்று கூறப்பட்டு வருகிறது.
Edited by Siva