1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. senior communist leader Sankaraiah passed away

கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

சங்கரய்யா
சுதந்திர போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா  காலமானார், அவருக்கு வயது 102.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சங்கரய்யா கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர்

இந்த நிலையில் சற்றுமுன் நபர் சிகிச்சை பலனின்றி சங்கரய்யா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரும் விடுதலை போட்ட வீரருமான போராட்ட வீரருமான சங்கரய்யா  பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர் என்பதும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யா இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் தி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு?