”12 ஆம் வகுப்பு பாடதிட்டமே போதும்.. நீட் பாஸ் பண்ணிடலாம்” செங்கோட்டையன் கருத்து
12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் படித்தாலே நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வை அமல்படுத்தியதிலிருந்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது. இது கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களில் மருத்துவக் கனவை குழி தோண்டி புதைக்கிறது என பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நீட் கோச்சிங் என்ற பெயரில் கட்டணம் அதிகமாக வசூலிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது.
இந்நிலையில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் , 12 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மேலும் வரும் கல்வியாண்டு தொடங்கியவுடன் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.