செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 செப்டம்பர் 2025 (12:21 IST)

கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிப்பு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிப்பு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 
 
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் இந்தப் பதவி பறிப்பு நடந்துள்ளது. 
 
செங்கோட்டையனின் நிபந்தனைகளுக்கு பிறகு, திண்டுக்கல்லில் பிரச்சாரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி போன்ற மூத்த நிர்வாகிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆலோசனைகளுக்குப் பிறகே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், இதன் காரணமாக செங்கோட்டையனுக்கு கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Mahendran