வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (16:56 IST)

ஊழல் புகார்களை ரஜினி, கமலுக்கே அனுப்புங்கள்: எஸ்.வி.சேகர் அதிரடி!

ஊழல் புகார்களை ரஜினி, கமலுக்கே அனுப்புங்கள்: எஸ்.வி.சேகர் அதிரடி!

அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் புகார்களை பொதுமக்கள் அனைவரும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுக்கு அனுப்புங்கள் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


 
 
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில தினங்களாக தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். செய்தியாளர்களை சந்தித்த கமல் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என கூறி அமைச்சர்களை டென்ஷனாக்கினார்.
 
இதனையடுத்து கடுப்பான அமைச்சர்களை கமலை விமர்சிக்க ஆரம்பித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த கமல் மக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் முறைகேடுகள் ஊழல்கள் குறித்து அமைச்சர்களின் இணையதள முகவரிக்க அனுப்ப கேட்டுக்கொண்டார்.
 
கமல் கூறிய அடுத்த நாளே தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகள், புகார் பகுதிகள் நீக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஊழல் புகார்கள் குறித்து நடிகர்கள் கமலுக்கும் ரஜினிக்கும் அனுப்புங்கள் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
 
இது குறித்து கூறிய அவர், மக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும், ஊழல் குறித்தும் அமைச்சர்களுக்கும் அனுப்புங்கள் என கமல் கூறினார். ஆனால் அரசு பின்பற்றும் தவறான நடைமுறையால் அந்த புகார்கள் ஏதும் அமைச்சர்களை சென்றடையாது.
 
எனவே மக்கள் உங்கள் புகார்களை நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிக்கு அனுப்புங்கள் என கோரிக்கை வைக்கிறேன். அவர்கள் அதை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் அந்த புகார்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் கமல் கூறிய உடன் இணையதள முகவரிகளை அமைச்சர்கள் நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது என்றார்.