வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 மே 2019 (13:09 IST)

நீங்கள் ஊர்சுற்றியா ? – உங்களுக்கு சீமான் கொடுக்கும் வேலை !

சீமான் தன்வசம் ஆட்சி ஒப்படைக்கப்படுமாயின் பள்ளி செல்லமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வேன் என அடம்பிடிக்க வைப்பேன் எனக் கூறியுள்ளார்.

சீமான் மேடைகளில் நரம்புகள் புடைக்க அடிவயிற்றில் இருந்து முழங்கும் பேச்சைக் கேட்க தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். அதேப் போல சீமானின் பேச்சை விமர்சனம் செய்யவும் ஒருக் கூட்டம் உருவாகியுள்ளது.

சீமான் அடிக்கடி மேடைகளில் பேசும் மாற்றுப் பொருளாதாரம் பற்றி விமர்சனங்கள் எழுவது வழக்கம். நேற்று சூலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் ‘ என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால், பள்ளி செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை, பள்ளி செல்வேன் என்று அடம் பிடிக்க வைத்து விடுவேன் என்று தெரிவித்தார். 

மதிப்பெண்களைக் காட்டிலும் மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பதுதான் முக்கியம். ஊர் சுற்றிப்பார்ப்பதுதான் உங்களுக்குப் பிடிக்குமா உங்களுக்கு சுற்றுலாத்துறையில் வேலைக் கொடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே சீமான் பேசிய ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக மாற்றுவது குறித்த சர்ச்சைகளும் கேலிகளும் உருவான நிலையில் அடுத்து சுற்றுலாத்துறை வேலை குறித்த பேச்சும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.