திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (15:47 IST)

பாஜகவுக்கு ஆதரவாக திமுக செயல்பட்டு வருகிறது! – சீமான் குற்றச்சாட்டு!

சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்திய நா.த.க சீமான் திமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க கோரியும், 7 பேர் விடுதலையை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கடந்த அதிமுக ஆட்சியில் அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. எதிர்கட்சியாக இருந்த திமுக தற்போது ஆளும் கட்சியான பிறகு இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. அதிமுக, திமுக கட்சிகள் இஸ்லாமியர்களை வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்” என்று பேசியுள்ளார்.

மேலும் “மத்திய அரசை எதிர்ப்பதாக சொல்லும் திமுக ஆளுனர் சந்திப்பிற்கு பிறகு புதிய கல்வி கொள்கை, வீடு தேடி கல்வி திட்டம் போன்றவற்றிற்கு ஆதரவு தருகிறது. இது பாஜகவுக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது” என தெரிவித்துள்ளார்.