படம் நல்லாயிருக்கு.. அக்னி கலசத்தை காட்டாம இருந்திருக்கலாம்! – சீமான் கருத்து!
ஜெய்பீம் படத்தில் அக்னி கலசத்தை வைக்காமல் இருந்திருக்கலாம் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.
அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை விவகாரம் குறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “அக்னி கலசம் வன்னியர் சங்கத்தின் முத்திரை என்பது உலகத்திற்கே தெரியும். அப்படியிருக்கும்போது அதை ஏன் ஜெய்பீம் படத்தில் வைக்க வேண்டும்? அக்னி கலசத்தை படத்தில் தவிர்த்திருக்கலாம். அன்புமணி சூர்யாவுக்கு எழுதிய கடிதத்தில் இருக்கும் வலி மற்றும் உண்மை தன்மையை மறுக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.