வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (12:34 IST)

கோடை வெயிலால் தமிழக பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

கோடை வெயில் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

 
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்தெடுக்கிறது. இதில், சென்னையில் நேற்று மட்டும் 108.3 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
 
வறுத்தெடுக்கும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்திருந்தனர். அதன்படியே, புதுச்சேரியில் சுட்டெரிக்கும் வெயிலை அடுத்து பள்ளி திறப்பு ஜூன் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்திலும் வெயில் காரணமாக பள்ளிகளின் திறப்பு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும். கொளுத்தும் வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இல்லை. பள்ளிகள் திறக்கப்படும் நாள் அன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்.