1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (21:26 IST)

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் பஸ் பாஸ் ரத்து

பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களின் பஸ் பாஸ் ரத்து செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.


 

 
பள்ளி  மாணவர்கள் பேருந்து படிகட்டில் பயனம் செய்யும்போது, சில சமயம் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
 
இதுபற்றி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, முதல் முறையாக பேருந்துகளில் புட்போர்டு அடிக்கும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை விடுக்கும்படி பள்ளி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அப்போதும் கேட்காமல், தொடர்ந்து பேருந்தில் ஃபுட்போர்டு அடிக்கும் மாணவர்களின் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்பட்டு, அந்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.