வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (12:47 IST)

மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்: பெற்றோர்கள் முற்றுகை

அரியலூரில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியர் புனிதவதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


 
 
அரியலூர், சாலையக்குறிச்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் புனிதவதி. இவர் பள்ளிக்கு தாமதமாக வருவது, சரிவர வகுப்பெடுப்பது இல்லை உள்ளிட்ட பல புகார்கள் இவர் மீது உண்டு.
 
இந்த பள்ளியில் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இவர்களை வைத்தே தலைமை ஆசிரியர் புனிதவதி வகுப்பறைகள், கழிவறைகள் போன்றவற்றை சுத்தம் செய்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார் புனிதவதி. இந்த தகவலை அறிந்து வந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் புனிதவதியை இடமற்றம் செய்ய வலியுறுத்தினர்.
 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தொடக்க கல்வி அலுவலர் விஜயலட்சுமி பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தலைமை ஆசிரியர் புனிதவதியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.
 
மேலும், புனிதவதி மீது துறை ரீதியான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதனையடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் விட்டுச் சென்றனர்.