1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (21:08 IST)

பள்ளி மாணவி பலாத்காரம்.! மனிதத்தன்மையற்ற சம்பவங்களை தடுத்திட வேண்டும்.! கனிமொழி ட்வீட்..!!

kanimozhi
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
 
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் வடு இன்னமும் நீங்காமல் உள்ள  நிலையில், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி, கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும் என்று கனிமொழி பதிவிட்டுள்ளார்.